1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 19 ஜூன் 2022 (10:40 IST)

இனி பேசுவதற்கு முன்பு இரண்டு முறை யோசிப்பேன்: நடிகை சாய் பல்லவி

இனிமேல் என் இதயத்தில் உள்ளதை பேசுவதற்கு இரண்டு முறை யோசிப்பேன் என்று நடிகை சாய் பல்லவி விளக்கமளித்துள்ளார்.
இனிமேல் என் இதயத்தில் உள்ளதை பேசுவதற்கு இரண்டு முறை யோசிப்பேன் என்று நடிகை சாய் பல்லவி விளக்கமளித்துள்ளார். 
 
நடிகை சாய் பல்லவி கூறிய சர்ச்சைக்குரிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் பாஜகவினர் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர் என்பது பாஜகவுக்கு எதிரானவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட விளக்கம் கூறி சாய் பல்லவி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பதை பார்த்தோம். அதில்  இனி என் இதயத்திலிருந்து இவற்றை பேசுவதற்கு கூட இரண்டு முறை யோசிப்பேன் என்றும் நான் கூறிய வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வேண்டுமென்றே திரித்து கொள்ளப்பட்டதாக அறிகிறேன் என்றும் எந்த மதத்தின் பெயராலும் வன்முறை நடந்தால் அது தவறு என்று தான் நான் கூற வந்தேன் என்றும் அவர் தெரிவித்தார்