திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (14:19 IST)

சிம்புவால் அமெரிக்காவுக்குச் சென்றேன்- டி.ராஜேந்தர்

T Rajendar
தமிழ் சினிமாவின் மூத்தக் கலைஞர்களில் ஒருவரான டி ராஜேந்தர் கடந்த மே மாதம் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். அவருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து அவர் நலமாக உள்ளதாக செய்திகள் வெளியாகின. அதை உறுதிபடுத்துவது போல தற்போது TR, தன் மகன் சிம்பு மற்றும் மனைவி உஷா ஆகியோரோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்நிலையில் இன்று அவர் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த டி. ராஜேந்தர் கூறியதாவது:

தமிழ் நாட்டு மக்களின் பிராத்தனையால் குணமாகியுள்ளேன்.   நான் அதே பழைய தெம்புடன் திரும்பியிருக்கிறேன். எனக்கு அமெரிக்காவில்தான் சிகிச்சை பெற வேண்டும் எனச் சிம்பு கூறியபோது,  நான் இந்தியாவுலேயே சிகிச்சை பெறலலாம் என்று கூறினேன். ஆனால், சிம்பு தான் கட்டாயம் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என்றார். நல்லபடியாக அங்கு சிகிச்சையும் பெற்றேன் எனத் தெரிவித்துள்ளார்.