1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 10 மார்ச் 2019 (15:39 IST)

அஜித்தை சினிமாவில் அறிமுகப்படுத்தியதே நான் தான்! சொன்னது யாருன்னு பாருங்க!

அஜித்தை அறிமுகப்படுத்தியது நான் தான் என்று பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


 
தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து கோடி கணக்கான ரசிகர்களின் பேஃரைட் நடிகரான தல அஜித்தை அறிமுகப்படுத்தியது நான் தான் என பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். 
 
பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்  தனது மகன் எஸ்.பி.பி.சரணுடன்  பங்கேற்றார் அப்போது  ‘அஜித் முதன் முதலில் ஹீரோவாக "பிரேம புஸ்தகம்" என்ற தெலுங்கு படத்தில் நடிக்க நான் தான் அவரை அறிமுகம் செய்தேன். இப்போது பெரிய ஹீரோவாகிட்டார். அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். 


 
ஆனாலும் பேட்டி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசுவது, சமூக வலைதளங்களில் கருத்து சொல்வது என எந்த அலட்டலும் செய்யாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று எந்த வம்புக்கும் போகாமல், சினிமா, குடும்பம் என அமைதியாக வாழ்ந்து வருகிறார். அதுதான் அவரிடம் எனக்கு ரொம்ப பிடித்த விசயம் என எஸ்.பி.பி. கூறியுள்ளார்.