செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 9 மார்ச் 2021 (23:41 IST)

அஜித்தைப் பற்றி தாமதமாகத் தெரிந்துகொண்டேன் - விவேக் டுவீட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது வலிமை என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார்.#ThalaAjith

 
இந்நிலையில், நடிகர் அஜித்குமார் பைக் ரேஸ், கார் ரேஸ், ட்ரோன் போன்றவற்றில் எந்தளவு ஆர்வமுடன் உள்ளாரோ அதேபோல் துப்பாக்கி சுடுதல் பயிற்சியிகளிலும் அவர் அவ்வப்போது ஈடுபட்டுவந்தார்.

சென்னையில் ரைபிள் கிளப்பில் 2019 ஆண்டு முதல் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில், சென்னை ரைபிள் கிளப் சார்பில் மாநில அளவிலான 46வது துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் 3 தங்கம், 4 சில்வர் மெடல் பெற்று சாதனை படைத்துள்ளார்.

சீனியர் பிரிவில் பங்கேற்ற நடிகர் அஜித்குமார், 25 மீட்டரில் 3 தங்கம், 10 மீட்டரில் 2 சில்வர், 15 மீட்டரில் 2 சில்வர் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும், அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கும் தேர்வாகியுள்ளார்.

தமிழக அரசியல்வாதிகள்,சினிமாப் பிரபலங்கள் உள்ளிட்ட  பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விவேக் இதுகுறித்துத் தகவல் தெரிந்ததும் அஜித்குமாரை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், நான் வட இந்தியாவில் படபிடிப்பில் உள்ளேன். தாமதமாக தெரிந்து கொண்டேன். அஜீத் எப்போதும் வித்தியாசமானவர் தான். மனம் நிறைந்த வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு ரசிகர் விவேக் சார் அஜித்குமார் உங்கள் நண்பர் அவரப் பாராட்டி நீங்கள் ஏன் பதிவு போடவில்லை என்ற கேள்விக்கு விவேக் இப்பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.