செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2021 (14:24 IST)

மூஞ்சு தெரிஞ்சாதானே அப்டேட் கேப்பீங்க! – கொல்கத்தாவில் மாஸ்க்குடன் சுற்றும் அஜித்!

நடிகர் அஜித் கொல்கத்தாவில் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கி வரும் படம் வலிமை. இதற்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் கடந்த ஒரு ஆண்டாக தொல்லை கொடுத்து வந்த நிலையில் அப்டேட் கேட்டு மற்ற பிரபலங்களை தொல்லை செய்ய வேண்டாம் என ரசிகர்களுக்கு அஜித் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இதனால் ரசிகர்கள் அமைதியான நிலையில் ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டதாகவும், விரைவில் அப்டேட்கள் வரும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஷூட்டிங் முடிந்ததால் ஓய்வுக்காக கொல்கத்தா சென்றுள்ளார் அஜித்குமார். முன்னதாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பைக்கில் பயணம் செய்த நிலையில் தற்போது கொல்கத்தாவில் மாஸ்க் அணிந்தபடி சைக்கிளில் வலம் வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.