வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜூன் 2020 (10:54 IST)

'சந்திரமுகி 2 ' படத்தில் ஜோதிகாவுக்கு பதில் நானா? சிம்ரன் அதிரடி விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ திரைப்படம் விரைவில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் முதன்முதலில் இணைந்து நடிக்க இருப்பதாகவும் முதல் பாகத்தை இயக்கிய பி வாசு இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் டைட்டில் கேரக்டரான ஜோதிகா நடித்த சந்திரமுகி கேரக்டரில் சிம்ரன் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை முடிந்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது. ஆனால் சிம்ரன் இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் மறுத்துள்ளார்
 
’சந்திரமுகி 2’ படத்தில் நான் நடிப்பதாக வெளிவந்த தகவல் முற்றிலும் தவறானது என்றும் தன்னிடம் படத்தின் குழுவினர் யாரும் இதுகுறித்து அணுகவில்லை என்றும் இப்போது வரை நான் அந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். இந்த விளக்கத்தை அடுத்து ’சந்திரமுகி 2’ படத்தில் சிம்ரன் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது