திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (09:09 IST)

ஒவ்வொரு சீசனிலும் என்னுடைய பெயரா? பிக்பாஸ் குறித்து பிரபல நடிகை!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசன் ஆரம்பிக்கும் போதும் என்னுடைய பெயர் போட்டியாளர்களின் பட்டியலில் இடம் பெறுகிறது என்று ஆதங்கத்துடன் நடிகை ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
 
நடிகை மற்றும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டரில் கூறியபோது ஒவ்வொரு பிக்பாஸ் சீசன் தொடங்கும் போதும் அந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களின் பட்டியலில் என்னுடைய பெயர் இருக்கிறது. என்னை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு பிக்பாஸ் குழுவினர் அணுகியது உண்மைதான். ஆனால் நான் மறுத்துவிட்டேன் 
 
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 இல் நான் போட்டியாளராக இல்லை. எனவே இதுகுறித்து செய்தி வெளியிடுபவர்கள் என்னுடைய பெயரை பட்டியலில் இருந்து நீக்கி விடவும். இதனை தெளிவு படுத்துவதற்காக இந்த டுவிட்டை பதிவு செய்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் போட்டியாளர் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது