தீபாவளிக்கு எத்தனைப் படங்கள் ரிலீஸ்?
தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட படங்களின் லிஸ்ட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.
ஆயுத பூஜைக்கு ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்ட சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’, தீபாவளிக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. மோகன் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனால், நிறைய தியேட்டர்கள் கிடைக்காது என்பதால், இந்தப் படம் டிசம்பர் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படத்தை, தெலுங்கில் வேறு தேதியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவெடுத்துள்ளாராம். எனவே, இந்தப் படமும் தீபாவளி போட்டியில் இருந்து வெளியேறுகிறது.
முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘கொடிவீரன்’ படம், தீபாவளிக்கு ரிலீஸாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்ணா, மகிமா நம்பியார் என இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இத்துடன், அர்ஜுன் தன் மகள் ஐஸ்வர்யாவை வைத்து இயக்கிய ‘சொல்லிவிடவா’ படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.