கவுண்டமணி கடைசியாக நடித்தது எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை என்ற திரைப்படம். அதன்பிறகு 6 ஆண்டுகளுக்குப் பிறகு கவுண்டமணி ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தள்ளார். இந்த படத்தை கவுண்டமணி காமெடிகளுக்கு ட்ராக் எழுதிய சாய் ராஜகோபால் இயக்குகிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படம் சம்மந்தமான கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் கவுண்டமணியுடன் யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். விரைவில் ரிலீஸாகவுள்ள இந்த படத்தை பைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அரசியல் வாதியான முத்தையா எதிர்கொள்ளும் பிரச்சனைகளே கதைக்களம் என தெரிகிறது. டிரைலரில் ஆங்காங்கே தமிழக அரசியல் சம்பவங்கள் நக்கலடிக்கப்பட்டுள்ளன. கவுண்டமணியோடு, யோகி பாபு, சிங்கமுத்து,மொட்ட ராஜேந்திரன் என பெரும் காமெடிப் பட்டாளமே இருந்தாலும் பெரிதாக சிரிப்பை வரவழைக்கக் கூடிய வசனங்கள் டிரைலரில் இல்லை.