புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 5 ஆகஸ்ட் 2020 (17:24 IST)

உங்கள் அப்பா எப்படி முதல்வர் ஆனார் ? முதல்வரின் மகனைத் தாக்கும் முன்னணி நடிகை

கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த்  மன அழுத்தத்தால்  தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு வாரிசு நடிகர்களே காரணம்  என்று முன்னணி நடிகை கங்கனா ரணாவத் குற்றம்சாட்டினார்.

பின்னர் இதுகுறித்த விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தினர்.  இதில் சுஷாந்தின் தந்தை நடிகை ரியா மீது புகர் அளித்துள்ளார்.

இவ்விவகாரத்தில் மஹாராஷ்டிர அரசுக்கும்  பீகார் அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத் சுஷாந்த் சிங்கின் தற்கொலை  விவகாரம் குறித்து தொடக்கம் முதலே குரல் கொடுத்து வருவதால், மஹாராஷ்டிரா முதல்வரின் மகன் ஆதித்ய தாக்கரேயின் கருத்துக்கு டுவிட்டர் பக்கதில் பதில் அளித்துள்ளார்.

அதில், உங்கள் தந்தை எப்படி முதல்வர் ஆனார் என்பது எல்லோருக்க்கும் தெரியும் என்றும் மேலும் சுஷாந்த் சிங் மரணம் தொடபான கேள்விகளை அவரிடம் கேட்டுள்ளார்.