திங்கள், 25 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 ஜூன் 2023 (17:59 IST)

விடுதலை படத்தில் சூரியை ஹீரோவாக்கியது எப்படி? வெற்றிமாறன் விளக்கம்

விடுதலை படத்தில் சூரியை ஹீரோவாக்கியது பற்றி வெற்றிமாறன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி  இயக்குனர் வெற்றிமாறன். இவர், பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை,அசுரன், ஆகிய படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில், விஜய் சேதுபதி, சூரி நடிப்பில், இளையராஜா இசையமைப்பில் விடுதலை என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது.

இந்த நிலையில்,  இன்று  நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், செய்தியாளர்கள் சந்திப்பின்போது,  இயக்குனர் வெற்றிமாறனிடம்  நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் அனைத்து பத்திரிக்கையாளர்கள் சார்பில்  ‘’விடுதலை படத்தில் சூரியை  ஹீரோவாக்க வேண்டுமென்று முயற்சி செய்தீர்களா? எப்படி நடந்தது இது? இப்படத்தின் பார்ட் 2 எப்படி வரும்? இதே மாதிரி தனுஷ்-ன் வட சென்னை பார்ட் 2 எப்போது வரும்’’ என்று கேள்வி கேட்க விரும்புவதாக கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த வெற்றிமாறன், வடசென்னை 2 வரும், இதற்கு முன்பு சில கமிட்மெண்ட்கள் முடிந்த பின் வேலை தொடங்கும்.

அசுரன் படம் நடந்து கொண்டிருக்கும்போதே சூரியை விடுதலை படத்தின் ஹீரோ என்று முடிவு செய்துவிட்டேன். அந்த நேரத்தில் ஒரு அஜினபி என்ற ஒரு நாவல் கல்ஃபில் வேலை செய்கிறவரின் வாழ்க்கை, அதுவும் பண்ண முடியவில்லை. கைதிகள் ஜெயமோகனின் கதையை பண்ண நினைத்தேன் அவர் ரைட்ஸை வேறு ஒருத்தருக்கு கொடுத்துவிட்டதால் பண்ணமுடியவில்லை’’ என்று கூறினார்.