வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 26 ஜூன் 2023 (16:16 IST)

விஜய் மக்கள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட மாணவி நேத்ரா முதலிடம்

விஜய் மக்கள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட சிறுதொண்ட நல்லூர் பகுதியைச் சேர்ந்த மாணவி நேத்ரா பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்.  இவர் சமீபத்தில்  கல்வி விருது நிகழ்ச்சி நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதிலும் இருந்து 234  தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற  மாணவ, மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தி, சான்றிதழ் மற்றும் உதவித் தொகை வழங்கி, விருந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில்  நடிகர் விஜய்  மாணவர்களிடம் பேசிய பேச்சு தமிழகத்தில் பேசு பொருளாக மாறியது.

இந்த நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நல்ல மதிப்பெண் பெற்ற சில மாணவ, மாணவிகளை அழைக்கவில்லை என்று  கூறப்பட்டது.
nethra

இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட சிறுதொண்ட நல்லூர் பகுதியைச் சேர்ந்த  மாணவி நேத்ரா பொறியியல் படிப்பிற்கான தர வரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.