1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 ஜூன் 2021 (21:40 IST)

HBD விஜய்.....விஜய்யின் பிறந்தநாள் திருவிழா.....

நாளை நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ரசிகர்கள் அவரது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது ரசிகர்கள் இணையத்தில் அவரது படங்கள்,புகைப்படங்கள், மற்றும் விஜய்65 பட தலைப்பு குறித்த பல விஷங்களை ஷேர் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் நாளை தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். ஆனால் அவரது ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கடந்த வாரம் முதலாய் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது விஜய் 65 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்ட் வெளியாகியுள்ளது.

நாளை விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, நெல்சன் இயகக்த்தில் விஜய் நடித்துள்ள விஜய்65  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. சமூக வலைதளங்களில் திரைநட்சத்திரங்கள் மற்றும் நெட்டிசன்களின் பேச்சு எல்லாம் விஜய்யின்  விஜய்65 படம் குறித்தே உள்ளது.

குறிப்பாக எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத வகையில், அதிக டுவிட்களும், அதிக ரீடுவீட்களும், அதிக லைக்குகளும் பெற்றதாக விஜய்யின் பிறந்தநாள் common dp சாதனை படைக்க வேண்டுமென ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

மேலும், நாளை 40 க்கும் மேற்பட்ட திரை நட்சத்திரங்கள் இணைந்து விஜய் பிறந்தநாளுக்கான பாடியுள்ள அண்ணே வேற மாறி என்ற பாடல் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.