புதன், 4 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (17:01 IST)

சமுத்திரக்கனியால் அலையும் ஹரி படக்குழு!

இயக்குனர் ஹரி இயக்கும் புதிய படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார்.

நீண்டநாள் கழித்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் அவரது மைத்துனரும்,நடிகருமான  அருண்விஜய் ஒரு ஆக்சன் படத்தில் நடிக்கவுள்ளார்.  இப்படம் அருண்விஜய்க்கு 33வது படம். அதேபோல் ஹரிக்கு இந்த படம் 16 வது படமாகும்.  இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். மேலும், ராதிகா, பிரகாஷ்ராஜ், புகழ், அம்மு அபிராமி, ஜெயபாலன், உள்பட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பழனி, காரைக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களில் மாறி மாறி நடந்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் படப்பிடிப்பு வந்த நிலையில் திடிரென பழனிக்கு படக்குழு சென்றுள்ளது. அதற்கு காரணம் சமுத்திரக்கனிதானாம். அவர் தெலுங்கு படங்களில் பிஸியாக இருப்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை எடுப்பதற்காக ராமநாதபுரத்தில் இருந்து பழனிக்கு சென்றுள்ளதாம்.