பிரபல நடிகருக்கு பிறந்தநாள் ..''லியோ'' பட கிளிம்ப்ஸ் வீடியோ வெளிட்டு வாழ்த்திய படக்குழு
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் 64 வது பிறந்த நாளை முன்னிட்டு லியோ படக்குழு அவருக்கு பிறந்த நாள் பரிசாக கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் முதல் சிங்கில் ''நா ரெடி'' என்ற பாடல் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. அனிருத் இசையமைப்பில் உருவான இப்பாடலை விஜய் பாடியிருந்தார். வைசாக் பாடல் எழுதியிருந்தார். இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், லியோ பட ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இப்பட பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் லியோ படத்தில் முக்கிய வில்லனாக நடித்துள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்குப் பிறந்தநாள் பரிசாக லியோ படத்தில் அவர் சம்பத்தப்பட்ட கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் அந்தோனிதாஸ் என்ற கேரக்டரில் சஞ்சத் தத் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத விஜய் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.