புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 1 ஜனவரி 2022 (09:57 IST)

இந்தியன் 2 அப்டேட்… விவேக்குக்கு பதில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகர்!

இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் விவேக் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார்.

2021 ஆம் ஆண்டு தமிழ் சினிமா இழந்த கலைஞர்களில் நடிகர் விவேக்கும் ஒருவர். எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த அவர் நடித்துக்கொண்டிருந்த சில படங்கள் இப்போது சிக்கலுக்கு ஆளாகியுள்ளன. அதில் ஒரு படம்தான் இந்தியன் 2. கமல்ஹாசன் மற்றும் விவேக் இணைந்து நடிக்கும் முதல் படமாக உருவான இந்த படத்தில் விவேக் தான் சம்மந்தப்பட்ட காட்சிகளில் பெரும்பாலானவற்றை நடித்து முடித்துள்ளாராம்.

ஆனால் இப்போது அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை நீக்கிவிட்டு அவருக்கு பதில் குரு சோமசுந்தரத்தை வைத்து முதலில் இருந்து படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம்.