கிரிக்கெட் உலகிற்கு பெரும் சோகம்…சூப்பர் ஸ்டார் இரங்கல்
கிரிக்கெட் உலகின் ஜாம்பாவான் ஷேன் வார்னே மறைவுக்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வார்னே(52) சமீபத்தில் தாய்லாந்து சென்றதாகவும் அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஷேன் வார்னே மறைவிற்கு உலக கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது டுவிட்டர் பக்கத்தில், ஷேன் வார்னே இறப்புச் செய்தியைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைதேன்.இது கிரிக்கெட் உலகிற்கு பெரும் இழப்பு! உங்களை பெரிதும் இழக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். இன்று ஆஸ்திரெலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ரூட்னே மார்ஸும் (74) காலமானார். அவரது மறைவுக்கும் மகேஷ்பாபு இரங்கல் தெரிவித்துள்ளார்.