புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 16 ஜூன் 2021 (21:00 IST)

பிரமாண்டம்.... ஒரு பாடலுக்கே படம் போல் செலவழிக்கும் ராஜமெளலி !

இந்தியாவில் பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கிவரும் படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா, ஆலியாபட் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

கொரொனா இரண்டாம் அலை காரணமாக இப்படத்தில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால்  இப்படத்தின் மீதமுள்ள காட்சிகள் எப்போது எடுக்கப்படும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

அடுத்தாண்டு ஜனவரி மாதம் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதால், இப்படத்திற்கான 2 பாடல் காட்சிகளை மட்டும் படமாக்க உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மேலும், இப்படத்தின் வசன காட்சிகளுக்கான ஷூட்டிங் முடிந்துவிட்டதால் இப்படத்தில் இடம்பெறும் 1 பாடலுக்காக 30 நாட்களை செலவிட உள்ளதாகவும் அந்தளவு இது பிரமாண்ட விஷீவலாக இருக்கும் எனவும் இயக்குநர் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.