வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 14 ஏப்ரல் 2018 (16:03 IST)

அவனுங்கல எல்லாம் தூக்குல போடுங்க சார் - நடிகர் சதீஷ் ஆவேசம்

சிறுமி ஆசிஃபாவை சீரழித்துக் கொன்ற அயோக்கியர்களை தூக்கிலிட வேண்டும் என காமெடி நடிகர் சதீஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா, கடந்த ஜனவரி மாதம் கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பல நாட்கள் பட்டினி போட்டு, மயக்க மருந்து கொடுத்து, தொடர்ந்து பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் போலீஸாரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பலாத்கார சம்பவத்திற்கு எதிராக நாடே கொந்தளித்துள்ளது.
இந்நிலையில் நடிகர் சதீஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் சிறுமியை கற்பழித்து கொன்றவர்களை பிடித்து, பின் வெளியே விடாமல், இவர்களை தூக்கிலிடவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.