புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 20 அக்டோபர் 2018 (16:31 IST)

வட சென்னை படத்தை புகழ்ந்த கௌதம் மேனன்...

தமிழ் சினிமாவில்  மிகவும் ஸ்டைலிஸ் ஆன டைரக்டர் என்று பெயரெடுத்தவர் கௌதம் மேனன் .அவர் முக்கியமான நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கி ஹிட் கொடுத்துள்ளார்.அவர் தற்போது தனுஸ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வட சென்னை படத்தை பற்றி தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்  கூறியிருப்பதாவது:

'என் சிரம் தாழ்ந்த வணக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் வெற்றிமாறன். அருமையாக காட்சியமைப்பு செய்துள்ளீர்கள். உங்கள் பெயர் வரும் போது ரசிகர்கள் கைதட்டும் சப்தத்தை விட வேறு எதுவும் சிறந்து இல்லை. தனுஷ் மிக அற்புதமாக நடித்துள்ளார்.ஆண்டிரியா மற்றும் ஐஸ்வர்யா ரஜேஷ் ஆகியோர் மிகவும் சிறப்பாகவும் எதார்த்தமாகவும் நடித்துள்ளனர் ' என்று பாராட்டியுள்ளார்.