1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 18 ஜனவரி 2018 (21:06 IST)

கெளதம் கார்த்திக் நடிக்கும் ‘தேவர் ஆட்டம்’

கெளதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்திற்கு ‘தேவர் ஆட்டம்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘கொடிவீரன்’ படங்களை இயக்கிய முத்தையா அடுத்ததாக இயக்கும் படத்திற்கு ‘தேவர் ஆட்டம்’ எனப் பெயர்  வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.
 
கிராமத்து கதைக்களத்தில் ஜாதியை அடிப்படையாக வைத்து படமெடுப்பவர் முத்தையா. வெளிப்படையாக படத்தில் ஜாதி சொல்லப்படாவிட்டாலும், பார்ப்பவர்களுக்குத் தெரிந்துவிடும். ஆனால், இந்தப் படத்துக்கு வெளிப்படையாகவே ‘தேவர் ஆட்டம்’ எனப் பெயர் வைத்துள்ளதால், ஜாதி விஷயங்கள்  கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் எனத் தெரிகிறது.
 
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் ‘ஹர ஹர மஹாதேவஹி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிக்கிறார்  கெளதம் கார்த்திக்.