திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 13 டிசம்பர் 2017 (18:03 IST)

ஒருவழியாக உதயநிதி ஸ்டாலினைப் பிடித்த சீனு ராமசாமி

சீனு ராமசாமி இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
விஜய் சேதுபதி நடிப்பில் ‘தர்மதுரை’ என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்தவர் சீனு ராமசாமி. அதன்பிறகு மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து ‘மாமனிதன்’ என்ற படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், விஜய் சேதுபதி பிஸியாக இருப்பதால்,  அந்தப் படம் தொடங்கப்படவில்லை.
 
அதன்பிறகு அதர்வாவை வைத்துப் படம் இயக்குவதாக இருந்தது. அதுவும் தொடங்கவில்லை. இந்நிலையில், உதயநிதி  ஸ்டாலினை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார். படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. சீனு ராமசாமி இயக்கிய ‘நீர்ப்பறவை’ படத்தைத் தயாரித்தவர் உதயநிதி ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், உதயநிதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. உதயநிதி தனது அடுத்த படத்தில் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை உதயநிதியின் ரெட்  ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.