கேம்சேஞ்சர் பாடல் ரிலீஸ் ஒத்திவைப்பு… இதுதான் காரணமா?
இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் கேம்சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்துக்காக கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதித் தந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பாதி அளவுக்கு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் மூலம் முதன் முதலாக தமன் ஷங்கர் படத்துக்கு இசையமைக்கிறார். இதுவரை ஷங்கர் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் அல்லது ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய இருவர்தான் இசையமைத்துள்ளார்கள். இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் உரிமம் சுமார் 30 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தீபாவளியன்று (நாளை) இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ஜரகண்டி பாடல் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தொழில்நுட்பக் காரணங்களால் இப்போது பாடல் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.