1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 14 ஜனவரி 2021 (14:07 IST)

ரூ.5 லட்சத்தை பெற்றவர் ரம்யா இல்லையாம், இவர்தானாம்!

ரூ.5 லட்சத்தை பெற்றவர் ரம்யா இல்லையாம், இவர்தானாம்!
பிக்பாஸ் வீட்டில் ரூபாய் ஐந்து லட்சத்தை பெற்றுக்கொண்டு போட்டியிலிருந்து ரம்யா வெளியேறியதாக நேற்று செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று திடுக்கிடும் திருப்பமாக ரம்யா வெளியேறவில்லை என்றும் ரூபாய் ஐந்து லட்சத்தை பெற்றுக்கொண்டு வெளியேறியவர் கேபி தான் என்றும் கூறப்படுகிறது
 
இன்றைய இரண்டாவது புரமோவில் ரூபாய் 5 லட்சம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றவர்களில் ஒருவருக்கு வழங்கப்பட இருப்பதாகவும் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்து விலக விருப்பம் உள்ளவர் விலகலாம் என்றும் பிக்பாஸ் அறிவிக்கின்றார் 
 
இந்த நிலையில் ஆரி அந்தப் பெட்டியின் அருகே செல்வதுடன் இந்த புரமோ முடிவடைந்தாலும் ஆரி அந்த பணத்தை எடுக்க வாய்ப்பு இல்லை என்றும் அவர் மற்ற போட்டியாளர்களிடம் நாம் யாரும் பணத்தை எடுக்க வேண்டாம் என்றும் விளையாடி ஜெயிப்போம் என்றும் அறிவுரை கூறலாம் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளின் அடிப்படையில் கேபி ரூபாய் ஐந்து லட்சத்தை பெற்றுக்கொண்டு போட்டியிலிருந்து விலக முடிவு செய்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த காட்சிகளும் இன்று வெளியாகும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது