சாலைகளில் நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞரை தேடும் ஜி வி பிரகாஷ்!
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாஷ் ஒரு வீடியோவை பகிர்ந்து கண்டுபிடிக்க உதவி கேட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், சமீபகாலமாக நடிகராகவும் இருந்து வருபவர் ஜி வி பிரகாஷ். இவர் சமீபத்தில் டிவிட்டரில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அதில் ஒரு நாதஸ்வரக் கலைஞர் வீடு வீடாக சென்று வாசித்து யாசகம் பெறுகிறார். அவரின் வாசிப்பு திறமையால் கவரப்பட்ட ஜி வி அவரைக் கண்டுபிடிக்க யாராவது உதவினால் அவரை தன் பாடல்களுக்கு வாசிக்கப் பயன்படுத்திக் கொள்வேன் எனக் கூறியுள்ளார். மேலும் அவர் இசைக்குறிப்புகளை கச்சிதமாக வாசிக்கும் திறமையுள்ளவர் என்றும் கூறியுள்ளார்.