புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2019 (14:38 IST)

ராகவா லாரன்ஸ் பெயரில் போலி இணையதளம் – பணமோசடி செய்யும் கும்பல் !

பிரபல நடிகரான ராகவா லாரன்ஸ் பெயரில் போலியாக இணையதளம் உருவாக்கி அதன் மூலம் ஒரு கும்பல் பணமோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது.

பிரபல நடிகரும் இயக்குனருமான லாரன்ஸ் தமிழ் தெலுங்கு படங்களில் நடிப்பதோடு பொதுச்சேவைகளும் செய்து வருகிறார். ஆதரவற்றக் குழந்தைகளுக்கான இல்லம், ஊனமுற்றோருக்கான கல்விச்சேவைகள் மற்றும் முதியோர் இல்லம் போன்றவற்றை அவரது அறக்கட்டளை நடத்தி வருகிறது. இந்நிலையில் அவரது பெயரில் போலியான இணையதளம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் வீடு கட்டித் தருவதாக சொல்லி மக்களிடம் பணம் வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சிலர் அவர்போலவே மிமிக்ரி செய்தும் பணமோசடி செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபற்றி ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை மையத்தின் பொதுச் செயலாளர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் கொடுத்துள்ள புகாரில் இந்த செயலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.