திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 10 டிசம்பர் 2020 (11:38 IST)

விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்குகிறேன் – பிரபல இயக்குனரின் பெயரில் மோசடி!

விஜய் சேதுபதியை வைத்து தான் படம் இயக்க உள்ளதாக பிரபல இயக்குனர் ரெத்தின சிவா பேசுவது போல ஒரு ஆடியோ வாட்ஸ் ஆப்களில் பரவி வருகிறது.

2016 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் லஷ்மி மேனன் நடிப்பில் ரெத்தின சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் றெக்க. இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில் தோல்வி அடைந்தது. அதன் பின்னர் ரத்தின சிவா ஜீவா நடித்த சீறு படத்தை இயக்கினார். அந்த படமும் தோல்வி படமாகவே அமைந்தது.

இந்நிலையில் இப்போது ரத்தின சிவா பெயரில் ஒரு ஆடியோ ஒன்று திரைத்துறை சார்ந்தவர்கள் மத்தியில் பரவி வருகிறதாம். அதில் தான் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாகவும், அதை தயாரிக்க அல்லது பைனான்ஸ் செய்ய யாராவது விருப்பப்பட்டால் அனுகவும் என சொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதை ரத்தின சிவா மறுத்துள்ளார், அந்த ஆடியோவில் பேசுவது தான் இல்லை என்று கூறிய அவர் யாரும் அதை நம்பி ஏமாற வேண்டாம் எனக் கூறியுள்ளாராம்.