செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 11 அக்டோபர் 2017 (12:19 IST)

விஜய்யின் மெர்சல் படத்திற்கு கிடைத்த பெருமை!

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து, தீபாவளிக்கு வெளியாக உள்ள படம் மெர்சல். இப்படத்தில் மூன்று நாயகிகளான சமந்தா, நித்யாமேனன், காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா என  படம் முழுவதும் நிறைய பிரபலமான நடிகர்கள் நடித்துள்ளனர்.

 
'மெர்சல்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து இணையதளங்களில் பல சாதனைகளை முறியடித்தது. 25 மில்லியன் பார்வையாளர்கள், 10 லட்சம் லைக்ஸ் என சாதனைகள் குவிந்து கொண்டே இருக்கின்றது. டிரைலர் உருவாக்க நேரம் இல்லை  என்பதால், படத்தின் புரமோ வீடியோ அல்லது ஸ்டில்கள் தீபாவளி வரை தினமும் வெளிவரும் என்று படக்குழுவினர்  உறுதியளித்துள்ளனர். 
 
தற்போது இப்படம் ஜப்பானில் (Tokyo, Ebina, Osaka and Nagoya) போன்ற இடங்களில் வெளியாக இருக்கிறதாம். இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் அந்த இடங்களில் வெளியானதில்லை என்றும், முதல் தமிழ் படமும் இதுதான் என்றும்  கூறப்படுகிறது.
 
ஆனால் தற்போது அரசுடன் வரி பிரச்சனை போய்க் கொண்டிருப்பதால் கடந்த வாரத்தில் இருந்து எந்த படமும் வெளியாகவில்லை, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பில் உள்ள மெர்சல் என்னவாகும் என்பது கேள்வியாக இருக்கிறது.