ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2017 (16:12 IST)

மெர்சல்' டிரைலர் எப்போது? படக்குழுவினர்களின் விளக்கம்

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி யூடியூப் இணணயதளத்தில் விஜய் ரசிகர்களின் முயற்சியால் உலக சாதனை செய்தது. அதேபோன்று இன்னொரு உலக சாதனை செய்ய காத்திருப்பதாகவும், அதற்காக டிரைலரை வெளியிடுங்கள் என்றும் விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் படக்குழுவினர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.



 

 
ஆனால் படக்குழுவினர்கள் 'மெர்சல்' படத்தின் டிரைலர் வெளியிடும் திட்டம் இல்லை என்று தெரிவித்துவிட்டனர். 'மெர்சல்' படம் வெளியாக ஒரே ஒரு வாரம் மட்டும் இருப்பதால் மீதியுள்ள போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இரவுபகலாக நடைபெற்று வருவதாகவும், டிரைலர் உருவாக்க தற்போது நேரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
 
ஆனால் அதேநேரத்தில் இந்த படத்தின் புரமோ வீடியோ அல்லது ஸ்டில்கள் தீபாவளி வரை தினமும் வெளிவரும் என்று படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர். இதனால் டிரைலர் இல்லாமல் ஏமாற்றமடைந்த விஜய் ரசிகர்களுக்கு இந்த செய்தி ஒரு ஆறுதலாக உள்ளது.