1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : புதன், 26 ஜூலை 2017 (05:55 IST)

விஜய் & சூர்யா: போலி நம்பர் 1& போலி நம்பர் 2: ஆதாரத்துடன் நிரூபித்த ஆங்கில நாளிதழ்

கடந்த சில மாதங்களாகவே ஒரு திரைப்படத்தின் டீசரோ, டிரைலரோ, பர்ஸ்ட்லுக்கோ வந்துவிட்டால் உடனே சில சாதனைகளும் கூடவே வரும். அதிக பார்வையாளர்கள், அதிக ரீடிவிட்டுக்கள், அதிக லைக்ஸ்கள் என்பதுதான் அந்த சாதனைகள்



 
 
இதுவரை இந்த சாதனைகளை ரசிகர்கள் செய்வதாக நினைத்து கொண்டிருந்தோம். ஆனால் இவையெல்லாம் காசு வாங்கி கொண்டு செய்கிற கூட்டம் செய்கிற வேலை என்பது தெரியவந்துள்ளது.
 
ஒருசில நாயகர்கள் பெய்டு டுவிட்டர்களுக்கு பணம் கொடுத்து தங்களுடைய படத்தின் ஃபர்ஸ்ட்லுக் அதிக ரீடுவிட்டுக்கள், அதிக லைக்ஸ்கள் வாங்கியவாறு செய்ய லட்சக்கணக்கில் பணம் கொடுக்கின்றார்களாம். இவர்கள் பணம் வாங்கி கொண்டு ஆயிரக்கணக்கான புதிய டுவிட்டர் அக்கவுண்ட்களை உருவாக்கி அதன் மூலம் ரீடிவீட் மற்றும் லைக்ஸ்களை போட்டு வருகின்றனர்.
 
இந்த வகையில் சமீபத்தில் வெளியான விஜய்யின் 'மெர்சல் படத்திற்கும் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டுவிட்டர் புரமோஷனுக்காக லட்சக்கணக்கில் கைமாறியுள்ளதாக தெரிய வந்துள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. இந்த மாதிரி போலி ரீடிவிட் செய்யும் டுவிட்டர் அக்கவுண்ட்களில் ஃபாலோயர்கள் மற்றும் ஃபாலோயிங் எண்ணிக்கை ஜீரோவாக இருப்பதே இந்த அக்கவுண்டுகள் போலியானது என்பதை நிரூபிக்க ஒரே சான்றிதழாக உள்ளது.