1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: சனி, 5 ஆகஸ்ட் 2017 (00:51 IST)

ஃபெப்சி: பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை: மீண்டும் 11ஆம் தேதி பேச்சுவார்த்தை

ஃபெப்சி தொழிலாளர்கள் அமைப்பு மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்டுள்ள சம்பள பிரச்சனை குறித்து இன்று தொழிலாளர் வாரிய அதிகாரிகள் முன்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது



 
 
இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பினர்களுக்கும் இடையே எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை என்றும், இதனை அடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்த்தை வரும் 11ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் 11ஆம் தேதி பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தால் மீண்டும் வேலைநிறுத்தம் தொடருமா? என்ற நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் ஃபெப்சி அமைப்பினர் பிக்ஸ் செய்யும் சம்பளத்திற்கு ஒத்து போன தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது விஷால் தலைமையேற்றவுடன் முதல்முறையாக எதிர்ப்பு காட்ட தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.