1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: வெள்ளி, 10 நவம்பர் 2017 (10:05 IST)

கல்லாவை நிரப்புவதிலேயே குறியாக இருக்கும் நடிகை

கல்லாவை நிரப்புவதில் மட்டுமே குறியாக இருக்கிறார் நடிகை நிக்கி கல்ரானி.

 
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘டார்லிங்’ படத்தில் அறிமுகமானவர் நிக்கி கல்ரானி. பார்ப்பதற்கு கொஞ்சம் ஆம்பிளை போலத்  தெரிந்தாலும், அதிக படங்களில் நடித்துவரும் கோலிவுட் நடிகை இவர்தான்.
 
2015ஆம் ஆண்டு இவர் நடிப்பில் 7 படங்கள் ரிலீஸாகின. கடந்த ஆண்டு 6 படங்கள் ரிலீஸாகின. இந்த ஆண்டு இதுவரைக்கும் 5 படங்கள் ரிலீஸாகிவிட்டன. தற்போது ‘கீ’, ‘பக்கா’, ‘கலகலப்பு 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நிக்கி கல்ரானி.
 
விருது வாங்க வேண்டும், தன் நடிப்பு பேசப்பட வேண்டும் என்றெல்லாம் நினைக்காமல், ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள  வேண்டும்’ என நினைத்து வருகிற வாய்ப்புகளை எல்லாம் விடாமல் பிடித்துக் கொள்கிறாராம். பிழைக்கத் தெரிந்த  நடிகைதான்...