புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 ஜனவரி 2020 (16:34 IST)

அதே டெய்லர் அதே வாடகை! – விஜய் சட்டையை ரஜினிக்கு கொடுத்த முருகதாஸ்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அதில் ரஜினி உடுத்தியுள்ள உடைகள் பற்றிய புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் முதல் படம் தர்பார். நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்த படம் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டு வசூல் சாதனையும் புரிந்துள்ளது. இதற்கு முன்னால் ஏ.ஆர்.முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்க்கார் போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த படங்களில் விஜய் அணிந்துள்ள அதே உடைகளை தர்பார் படத்தில் ரஜினி அணிந்துள்ளதாக இணையத்தில் சச்சரவு ஏற்பட்டுள்ளது.

தர்பார் ஹிட் ஆனதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடிவரும் நிலையில் விஜய் ரசிகர்கள் முந்தைய படங்களில் விஜய் அணிந்திருந்த உடைகளின் போட்டோக்களையும், தர்பார் பட ரஜினி போட்டோக்களையும் இணைத்து போட்டு ‘எங்க தளபதி சட்டையை போட்டதால்தான் ரஜினி இளமையாக தெரிகிறார்’ என்று சொல்ல, சூடான ரஜினி ரசிகர்கள் ‘எதற்காக விஜய்க்கு கொடுத்த சட்டையையே ரஜினிக்கு கொடுத்தீர்கள்’ என சமூக வலைதளங்களில் முருகதாஸை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.