வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (08:59 IST)

நடிகர் ரஜினிகாந்தின் 71வது பிறந்தநாள்! – ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் ரஜினிகாந்தின் 71வது பிறந்தநாளான இன்று ரஜினி ரசிகர்கள் கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் துணை கதாப்பாத்திரமாக அறிமுகமாகி கடந்த 40 ஆண்டுகளில் இந்தியாவின் மிக முக்கியமான நடிகராகவும், அதிகமாக ரசிகர்களை கொண்ட நடிகராகவும் உயர்ந்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது 71வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி இன்று ரஜினி ரசிகர்கள் பலர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும் சில பகுதிகளில் ரசிகர்கள் அன்னதானம் உள்ளிட்டவற்றிற்கும் ஏற்பாடு செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் #HBDSuperstarRajinikanth மற்றும் #Thalaiva ஆகிய ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.