ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2019 (08:44 IST)

ஆள வச்சு செதச்சுடுவேன் : பகிரங்கமாக சின்மயிக்கு மிரட்டல் விடுத்த பிரபல தயாரிப்பாளர்!!!

சீப் பப்ளிசிட்டிக்காக இப்படி செஞ்சுட்டு இருந்தன்னா உன்ன ஆள வெச்சு சிதைச்சுடுவேன் என பிரபல தயாரிப்பாளர் சின்மயியை மிரட்டியுள்ளார்.
வைரமுத்து மீது சென்ற ஆண்டு பாடகி சின்மயி பாலியல் அத்துமீறல் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ஒரு இயக்கமாக மீடூ உருவாக பல பெண்களின் குற்றச்சாட்டுகளை சின்மயி வெளிக்கொண்டு வந்தார். சின்மயிக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்தாலும் அவர் வெறும் பப்ளிசிட்டிக்காக வைரமுத்து மீது பழி போடுகிறார் எனவும் பலர் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ராஜன் படவிழா ஒன்றில் பேசியபோது சம்பவம் நடைபெற்று 15 ஆண்டுகளுக்கு பின்னர் வெறும் பப்ளிசிட்டிக்காக அவ்வளவு பெரிய மனிதன் மீது பழி போடுகிறார் சின்மயி. மக்களிடையே அவர் நல்ல பெயரை எடுக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார். வெறும் சீப் பப்ளிசிட்டிக்காக இப்படி செய்யலாமா? அவர்ட்ட மட்டும் தான் ஆள் இருக்கா? எனக்கு ஆதரவாகவும் 50 பெண்கள் இருக்கிறார்கள். அவுங்கல வெச்சு சின்மயிய செதச்சுடுவேன் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.