பிரபல இயக்குனர் டி.பி.கஜேந்திரன் இன்று காலமானார்
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் டி.பி.கஜேந்திரன் இன்று காலமானார்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் டி.பி.கஜேந்திரன். இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு வீடு மனைவி மக்கள் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார்.
அதன்பிறகு, எங்கள் ஊரு காவல் காரன், பாட்டு வாத்தியார், பாசமுள்ள பாண்டியரே, பட்ஜெட் பத்ம நாபன், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவம், சீனா தானா உள்ளிட்ட படங்களை இயக்கினார். இவர் இயக்கிய கடைசி திரைப்படம் மகனே என் மருகமனே ஆகும்.
படங்கள் இயக்கியதுடன் குணச்சித்திர வேடங்கள், நகைச்சுவை வேடங்களிலும் நடித்து வந்தார்.
இந்த நிலயில், சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய அவர் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 68 ஆகும்.
அவரது மறைவுக்கு சினிமாத்துறயினரும், இயக்குனரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.