வீட்டில் திரைக்கதை எழுத தொடங்கிய பிரபல நடிகை

soniya agarwal
Sinoj| Last Updated: ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (15:21 IST)

கொரோனா தடுப்பாக, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், அனைவரும் வீட்டில் ஓய்வெடுத்து வருகின்றனர். இந்த நேரத்தை பலரும் பிரயோஜனப் படுத்திவருகின்றனர்.

அந்த வகையில், பிரபல நடிகர்கள், நடிகைகள், வீடியோ வெளீயிட்டு, ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 7 ஜி ரெயின் போ காலனி, மதுர போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை சோனியா அகர்வால் தற்போது கிடைத்துள்ள ஓய்வு நேரத்தில், ஒரு படத்துக்கான திரைக்கதை எழுதிவருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், வீட்டில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்கவும், தினமும் விலங்குகள்,பறவைகளுக்கு உணவு கொடுக்கவும் நேரம் கிடைத்துள்ளதாக கூறிய அவர், அரசாங்கத்தின் உத்தரவை பின்பற்றுமாறு தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :