1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2022 (13:36 IST)

4 வது திருமணம் செய்த பிரபல நடிகை...ரசிகர்கள் வாழ்த்து

Jennifer Lopez, Ben Affleck
பிரபல ஹாலிவுட் பட நடிகை ஜெனிபர் தன் முன்னாள் காதலரை 4 வதாக திருமணம் செய்துள்ளார்.

ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ஜெனிபர் லோபஸ்.   இவர் நடிகை மட்டுமல்ல பாடகியுமாவார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு ஏற்கனவே 3 முறை திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில், கடந்த 17 ஆம் தேதி தன்னிலும் 3 வயது குறைந்தவரும் முன்னாள் காதலருமான  நடிகர் பென் அப்லெக்கை 4 வதாக திருமணம் செய்துகொண்டுள்ளார் ஜெனிபர்.

இவருக்கு மொத்தம் 5 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நடிகர் பென்னுடன் திருமண நிச்சயம் வரை சென்ற நிலையில், இருவரும் பிரிந்தனர். தற்போது இருவரும் மண வாழ்க்கையில் நுழைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.