சந்திரமுகி 2 வில் இணைந்த பிரபல நடிகை… ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வைரல் புகைப்படம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டே தகவல் வெளியானது. பி வாசு இயக்க ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில் இப்போது அந்த படத்தின் வேலைகள் தூசு தட்டப்பட்டுள்ளன. திரைக்கதை வேலைகளை இயக்குனர் பி வாசு தொடங்க அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிவிட்டது. படத்தில் லாரன்ஸ் மற்றும் வடிவேலு ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 ஆம் தேதி முதல் மைசூரில் தொடங்கி நடந்துவருகிறது.
இந்நிலையில் இப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலுவுடன் நடிகை ராதிகாவும் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் சந்திரமுகி 2 வில் அவர் நடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும் ரவி மரியாவும் இந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளார்.