செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (17:16 IST)

கமலின் ’விக்ரம் 'படத்தில் இணைந்த பிரபல நடிகர் !

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில், பிரபல நடிகர் நரேன் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கமல்ஹாசன். ஐம்பது ஆண்டுகளாகச் சினிமாவில் இருந்தாலும் இன்னும் புதிய சிந்தனைகள்,கருத்துகளுடன் மக்களின் ஹீரோவாக அறியப்படுகிறார். அவரது படைப்புகளும் சிலாகித்துப் பேசப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் அடுத்த படம் விக்ரம். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். பல பிரபலங்கள் இப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

இப்படத்தில் அஞ்சாதே, தம்பிக்கோட்டை, கைதி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக  நடித்த மலையாள நடிகர் நரேன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் இன்று விக்ரம் பட ஷூட்டிங்கில் நரேன் கலந்துகொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இவர் ஏற்கனவே, கார்த்தி நடித்த கைதி படத்தில் நடித்திருந்த நிலையில் இப்படத்தில் அவர் நடிப்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

கமலுடன் விக்ரம் படத்தில் நடிப்பது குறித்து நடிகர் நரேன், நடிகர் கமலின் நடிப்பைப் பார்த்துத்தான் நான் சினிமாவுக்கு வந்தேன்.தற்போது ஒரு படத்தில் அவருடன் நடிப்பது கனவுபோல் இருக்கிறது.

நான் ஏற்கனவே நடித்துவரும் இரண்டு படங்கள் முடியும் நிலையில் உள்ளது. எனவே கமலுடன் நடிக்கும் நாட்களை எதிர்நோக்கி உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது ஒரு புதிய படத்தில் ஆட்டிஷம் பாதித்த நபராகவும்,. இன்னொரு தமிழ் படத்தில் நடித்து வருகிறேன் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.