கங்குலியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் பிரபல நடிகர்?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் பிரபல நடிகர் ஆயுஸ்மன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான கங்குலி, இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார்.
இவரை தாதா என்று ( பெங்காலி மொழியில் மூத்த சகோதரர் ) என்று அழைக்கப்படுவார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் போட்டிகளில் பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்து, அணியை வழிநடத்தி சிறப்பாக விளையாடினார்.
இந்திய அணி வெளி நாடுகளில் நடைபெற்ற 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 வெற்றிகள் பெற்றது.
இந்த நிலையில், கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிக்கவுள்ளதாகவும், இதுபற்றி கங்குலியை அவர் சந்தித்துப் பேசியதாகவும் தகவல் வெளியானது.
இப்படத்தின் ஷூட்டிங் இந்தாண்டு இறுதிக்குள் நடைபெறலாம் என்றும் இப்படத்தில் ஹீரோவாகக நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இப்படத்தின் நடிகர் ஆயுஸ்மன் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.