திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2021 (16:31 IST)

ஆர்.ஆர்.ஆர் பட ஹீரோவின் குடும்ப புகைப்படம் வைரல் !

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தற்போது இவர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகிவரும்  ஆர்.ஆர்.ஆர் என்ற பிரமாண்ட படத்தில் ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இணைந்து நடித்துவருகின்றனர்.

இவர்களுடன், ஆலியா பட் மற்றும்  ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் சம்மதித்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக்காட்சிக்காக 50 நாட்களை படம்பிடித்துள்ளது படக்குழு. இதையடுத்து படத்தின் ரிலிஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தின் தமிழக திரையரங்க உரிமையை லைகா நிறுவனம் இதுவரை எந்தவொரு படத்துக்கும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொகைக் கொடுத்து வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்நிலையில், ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் ஆர்.ஆர்.ஆர் படத்தின் அப்டேட் கேட்டுவருகின்றனர். இந்நிலையில், தெலுங்கு சினிமா பிரபலம் ஆர்யா சுக்குவின் குடும்ப நிகழ்ச்சியில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் கலந்துகொண்டார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.