ஷங்கருக்கு ராம் சரண் போட்ட நிபந்தனைகள்… இதெல்லாம் நடக்குற மாதிரி இல்லையே!
இயக்குனர் ஷங்கர் நடிகர் ராம் சரணை வைத்து இயக்கும் படத்துக்காக பல கண்டீஷன்களைப் போட்டு வருகின்றனராம்.
இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வந்த ஷங்கர் இப்போது வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் ஐம்பதாவது திரைப்படத்தில் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படம் அவரது 15 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பட்ஜெட் ஷங்கரின் கடைசி படங்களை விட மிகவும் கம்மியாம். ரூ 170 கோடி ரூபாய் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 மாதங்களுக்குப் பிறகே தொடங்க உள்ளதாம். இடையில் ராம் சரண் தனது ஆர் ஆர் ஆர் படத்தை முடிக்கவும், ஷங்கர் தனது மகளின் திருமணத்தை முடிக்கவும் முன்னுரிமைக் கொடுக்க உள்ளார்களாம்.
வழக்கமாக இயக்குனர் ஷங்கர் தன் படத்தின் பட்ஜெட் என்னவென்று கூட தயாரிப்பாளர்களிடம் சொல்ல மாட்டாராம். இதனால் இஷ்டத்துக்கு பட்ஜெட் எகிறிவிடும். ஆனால் தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு ஷங்கரின் கெடுப்பிடியாக பேசி முதலிலேயே பட்ஜெட் என்ன வென்று கேட்டு வாங்கிவிட்டாராம். மேலும் சொன்ன பட்ஜெட்டுக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்றும் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம். தயாரிப்பாளர்களின் இந்த நிபந்தனை போதாதென்று இப்போது ராம் சரண் தேஜாவும் சில நிபந்தனைகளைப் போட்டுள்ளாராம்.
அதில் இரண்டு முக்கியமான நிபந்தனைகளாக படம் தொடங்குவதற்கு முன்பாகவே முழு திரைக்கதைப் பிரதியையும் தன்னிடம் கொடுத்து விட வேண்டும் என்றும், படத்தை 120 நாட்களுக்குள் எடுத்துக் கொடுத்து விட வேண்டும் என்றும் கூறியுள்ளாராம். இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் ஓகே சொன்ன பிறகே ஷங்கருக்கு அட்வான்ஸ் கொடுத்துள்ளார்களாம்.