12 கிலோ எடை குறைத்த பஹத் பாசில்… வைரலாகும் புகைப்படம்!
நடிகர் பஹத் பாசில் ஜோஜி படத்துக்காக 12 கிலோ எடை குறைத்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறியுள்ளார்.
இயக்குனர் திலேஷ் போத்தன் அறிமுகமான முதல் படமான மகேஷிண்ட பிரதிகாரம், மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமா ரசிகர்களுக்கே மிகவும் பிடித்த படமாக அமைந்து திரைக்கதைக்கான தேசிய விருதை பெற்றது. அதையடுத்து மீண்டும் இருவரும் இணைந்த தொண்டிமுதலும் திருச்ஷாட்சியும் திரைப்படமும் மிகுந்த பாராட்டுகளை பெற்றது.
இதையடுத்து இப்போது இருவரும் மீண்டும் இணைந்து ஜோஜி என்ற படத்தை உருவாக்க உள்ளனர். இந்த படம் ஷேக்ஸ்பியரின் நாடகமான மெக்பத்தின் ஒரு பகுதியை தழுவி உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை இணையத்தில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்துக்காக இப்போது பஹத் பாசில் 12 கிலோ வரை எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறியுள்ளார். ஒல்லியான தோற்றத்தில் அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.