செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : சனி, 22 ஜூலை 2017 (17:35 IST)

நம்பின கடவுளே கைவிட்டாலும் விஜய் சேதுபதி உழைப்பு விடாது; இயக்குநர் சுசீந்திரன்

நம்பின கடவுள் கைவிட்டாலும், உழைப்பு கைவிடாது என்பதற்கு விஜய் சேதுபதி ஒரு உதாரணம் என இயக்குநர் சுசீந்திரன் கூறியுள்ளார்.


 

 
விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம் வேதா. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பு படத்தில் மேலும் பலத்தை கூட்டியுள்ளதாக அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் சுசீந்திரன் விக்ரம் வேதா படத்தை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
 
அதில், மாதவன், விஜய் சேதுபதி இருவருமே கலக்கல் செய்திருக்கிறார்கள். நம்பின கடவுள் கைவிட்டாலும், உழைப்பு கைவிடாது என்பதற்கு விஜய் சேதுபதி ஒரு உதாரணம். இன்றைய தலைமுறை நடிகர்களில் என்னை நடிப்பில் வியக்க வைத்த இரண்டாவது நடிகர் விஜய் சேதுபதி. 
 
படத்தில் நடிகர்களை இயக்குநர்கள் கையாண்ட விதம் நேர்த்தியாக இருந்தது. படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.