திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : சனி, 16 ஜூன் 2018 (10:34 IST)

துல்கர் சல்மான் நடிக்கும் ‘வான்’

துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்துக்கு ‘வான்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான துல்கர் சல்மான், தமிழிலும் நடித்து வருகிறார். ‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான துல்கர், மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நடித்தார்.
 
தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழில் வெளியான ‘சோலோ’ படத்திலும், தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான ‘நடிகையர் திலகம்’ படத்திலும் நடித்தார்.  தற்போது ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். இதன் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள்  நடைபெற்று வருகின்றன.
 
இந்நிலையில், அடுத்த தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் துல்கர். ‘வான்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர்  ரா.கார்த்திக் இயக்குகிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, தீனதயாளன் இசையமைக்க, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்கிறார். கெனன்யா பிலிம்ஸ்  செல்வகுமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.