வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (18:05 IST)

திருஷ்யம் 2 படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட ஜீத்து ஜோசப்!

நடித்துள்ள திருஷ்யம் 2 படத்தின் டிரைலர் பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்நிலையில் இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப்பே இயக்க இருக்கும் திருஷ்யம் 2 படத்தின் படப்பிடிப்பு  கொரோனா லாக்டவுன் சமயத்தில் பாதுகாப்பாக நடந்து முடிந்தது.

இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியிடுவதாக படக்குழு முடிவு செய்து டிரைலரையும் வெளியிட்டனர். அந்த டிரைலருக்கு எதிர்பார்த்த அளவைவிட அதிகமான வரவேற்புக் கிடைத்தது. இந்நிலையில் இப்போது இயக்குனர் ஜீத்து ஜோசப் த்ருஷ்யம் 2 படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளதாக நேற்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த அப்டேட்டாக திருஷ்யம் 2 படத்தின் டிரைலர் பிப்ரவரி 8 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.