புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2019 (18:51 IST)

பள்ளி மாணவர்களுக்கு சலுகை விலையில் ராட்சசி- ட்ரீம் வாரியர்ஸ் அதிரடி

ஜோதிகா நடிப்பில் வெளியாகியிருக்கும் ராட்சசி திரைப்படத்தை பார்க்க பள்ளி மாணவ, மாணவியருக்கு சலுகை அளித்துள்ளது ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம்.

ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடித்து வெளியாகியிருக்கும் படம் “ராட்சசி”. அரசு பள்ளிகளின் நிலையையும் அதன் ஆசிரியர்கள் முயற்சி செய்தால் அதை மாற்ற முடியும் என்ற சமூக கருத்தையும் கதையாக கொண்டு உருவாகி உள்ளது இந்த படம். வெளியான நாள் முதலாய் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது இந்த படம்.

இந்த படத்தை வெறும் பொதுமக்களுக்கு மட்டுமல்லாது மாணவ, மாணவியர்களும், ஆசிரியர்களும் பார்க்க வேண்டுமென முடிவெடுத்துள்ளது ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம். இதற்காக இந்த திரைப்படத்தை பார்க்க வரும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு 50 சதவீதம் டிக்கெட்டுகளில் சலுகை வழங்கியுள்ளது ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம்.