ஊடங்கு நேரத்தில் அஜித், சிம்பு படங்களை பார்க்க வேண்டாம்: கவுதம் மேனன்
இந்த ஊரடங்கு காலத்தில் அஜீத் நடித்த ’என்னை அறிந்தால்’ மற்றும் சிம்பு நடித்த ’அச்சம் என்பது மடமையடா’ ஆகிய இரண்டு திரைப்படங்களை பார்க்க வேண்டாம் என பிரபல இயக்குநர் கவுதம் மேனன் கூறியிருக்கிறார்
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் வெளியிட்டி கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் இயக்குனர் கௌதம் மேனன் கூறியிருப்பதாவது: 144 தடை உத்தரவை பொதுமக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் இந்த ஊரடங்கு நேரத்தில் அனைவரும் அதிகமாக புத்தகம் படிக்கவேண்டும் என்றும் ஆன்லைனில் திரைப்படம் பார்க்கலாம் என்றும் அறிவுரை கூறியுள்ளார்
மேலும் ஊரடங்கு நேரத்தில் வெளியே வந்து போலீசாரிடம் மாட்டிக் கொண்டு அபராதம் காட்டுவதைத் தவிர்க்கவும் என்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்
மேஉம் அஜீத் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித் தனது மகளை பல மாநிலங்களுக்கு மகளை அழைத்துக் கொண்டு சுற்றுலா செல்வார் என்றும் அதேபோல் ’அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தில் நடிகர் சிம்பு தனது காதலி மஞ்சிமா மோகனை வட நாட்டிற்கு பைக்கில் அழைத்துச் செல்வார் என்றும் இந்த இரண்டு காட்சிகளும் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றவை அல்ல என்பதால் இந்த இரண்டு திரைப்படங்களின் தற்போது பார்க்க வேண்டாம் என்றும் இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது