செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : சனி, 28 அக்டோபர் 2017 (13:17 IST)

படம் சுமாராக இருந்தால் மோசமாக விமர்சிக்க வேண்டாம்; ரஜினிகாந்த் அன்பு வேண்டுகோள்

படம் சுமாராக இருந்தாலும் சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சிக்க வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார். 


 

 
இந்தியாவே மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துக்கொண்டு பேசினர். அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது:-
 
நல்ல படங்களை ஆதரியுங்கள். படத்தில் நல்லது இருந்தால் அதன் கலைஞர்களை விசாலப்படுத்துங்கள். படம் சுமாராக இருந்தால் சமூக வலைதளங்களில் மற்றவர்களின் மனசு நோகும்படி விமர்சனம் செய்யக்கூடாது என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இளைஞர்கள் வாழ்க்கையில் இன்புற வேண்டுமென்றால், நமது கலாச்சாரத்தையும், மரபையும் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றார்.